இராமேஸ்வரத்தில் மீனவர்கள் கோஷ்டி மோதல்
2 பேரின் மண்டை உடைப்பு
இராமேஸ்வரம், ஜூன் 29:-
இராமேவரத்தில் இன்று மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் 2 பேரின் மண்டை உடைந்த ரத்தம் கொட்டியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த திடீர் மோதலால் இராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றத்தை தணிக்க போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.













0 comments