தனுஷ்கோடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை: மனைவி கைது
இராமேசுவரம், ஜூன் 29:-
இராமேசுவரம், தனுஷ் கோடி கம்பிப்பாடு பகுதியில் தங்கி மீன் பிடித்தொழில் செய்து வந்தவர் மகேந்திரன் (வயது 27). இவரது மனைவி மாதவி. இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு மகேந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மீன் பிடிக்க சென்று வந்த மகேந்திரன் மீண்டும தனது மனைவி மாதவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாதவி, கத்தியால் மகேந்திரனை நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோவில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாநிதி தனுஷ்கோடி சப்-இன்ஸ்பெக்டர் சந்தான ராஜ், சுப்பையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மகேந்திரனின் மனைவி மாதவியை போலீசார் கைது செய்தனர்.
0 comments