5 June 2013

சாம்பியன்ஸ் டிராபி இந்தியா 243 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது: கார்த்திக் 146*, டோனி 91 ரன் விளாசல்

 சாம்பியன்ஸ் டிராபி  
இந்தியா 243 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது: கார்த்திக் 146*, டோனி 91 ரன் விளாசல் 



கார்டிப் : 

                        ஆஸ்திரேலிய அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், இந்தியா 243 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஆஸி. வீரர்களின் துல்லியமான வேகத்தில் 
விஜய்   1, 

கோஹ்லி   9, 

ரோகித்   10, 

ரெய்னா   0, 

தவான்   17 

ரன்னில் வெளியேற, இந்தியா 16.1 ஓவரில் 55 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் கார்த்திக் , கேப்டன் டோனி ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. அபாரமாக விளையாடிய இருவரும் இணைந்து 211 ரன் சேர்க்க, யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியது.  டோனி 91 ரன் எடுத்து (77 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்தது. கார்த்திக் 146 ரன், ஜடேஜா 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, உமேஷ் யாதவ் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 34 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஹியூஸ் 14, வோஜஸ் 23 ரன் எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். ஆஸி. அணி 23.3 ஓவரில் 65 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய பந்துவீச்சில் உமேஷ் 5, இஷாந்த் 3, அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top