6 December 2013

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1543 பண்ணை குட்டைகளில் நீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1543 பண்ணை குட்டைகளில் நீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி


இராமநாதபுரம், 6:

இராமநாதபுரம்மாவட்டத்தில் உள்ள 1543 பண்ணை குட்டைகளிலும் நீர் நிரம்பியதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இராமநாதபுரம்மாவட்டத்தில் விவசாயிகளின் துயரை நிரந்தரமாக போக்கிடும் வகையில் மழைநீரை வீணாக்காமல் சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 5 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ்  

இராமநாதபுரத்தில் 136 பண்ணை குட்டைகளும்,  
திருப்புல்லாணியில் 128 பண்ணை குட்டைகளும், 
மண்டபத்தில் 30 பண்ணைக்குட்டைகளும், 
ஆர்.எஸ்.மங்கலத்தில் 132 பண்ணைக்குட்டைகளும்,
திருவாடானையில் 160 பண்ணைக்குட்டைகளும்,
பரமக்குடியில் 165 பண்ணைக்குட்டைகளும், 
போகலூரில் 126 பண்ணைக்குட்டைகளும், 
நயினார்கோவிலில் 107 பண்ணைக்குட்டைகளும், 
முதுகுளத்தூரில் 148 பண்ணைக்குட்டைகளும், 
கமுதியில் 122 பண்ணைக்குட்டைகளும், 
கடலாடியில் 222 பண்ணைக் குட்டைகள் 

என மொத்தம் 1543 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் பெரும்பாலானவை கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அறுவடைக்கு பின் இருக்கும் நீரை வைத்து 2–ம் பயிராக பயிர்வகைகள், எள் போன்றவை பயிரிட்டு விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிகரமாக இருக்கும்.

தமிழகத்திலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக அளவில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 2–ம் தர நீர்த்தேக்கம் என அழைக்கப்படும் இந்த பண்ணை குட்டைகள் மானாவாரி விவசாயத்திற்கு சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

விவசாயத்திற்கு பயன்படும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும் நிறைவேற்றப்பட்டு வரும் பண்ணை குட்டைகள் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் ½ மீட்டர் ஆழமும், மீதமுள்ள 1½ மீட்டர் ஆழத்தை எந் திரத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையானது விவசாயிகளுக்கு தேவைப்படும் பண்ணை குட்டைகளை அமைத்து தரப்படுகிறது. இதற்கான முழுதொகையும் அரசு சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. இவ் வாறு மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.

மாவட்டத்தில் அனைத்து பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டு இலக்கு எட்டப்பட்டால் விவசாயத் திற்கு பண்ணை குட்டை களில் சேகரிக்கப்படும் தண்ணீரை கொண்டே விவசாய பணிகளை முடித்துவிட முடியும் தமிழக அரசின் இந்த முயற்சியால் விவசாயம் பாதிக்கப்படாத நிலை உருவாகும். இதுதவிர இதில் சேகரிக்கப்படும் தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டமும் பாதுகாக்கப்படும்.

வட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்த ராஜ் கூறுகையில், முதல்– அமைச்சரின் கருணையால் எனது 2½ ஏக்கர் விவசாய நிலத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் பண்ணைக்குட்டை முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. இதன் மூலம் 2½ ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு 80 மூட்டை நெல் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பண்ணைக்குட்டையில் உள்ள நீர் இருப்பை வைத்து 2–ம் போக சாகுபடியில் மிளகாய், சோளம், பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

மாதவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைமுருகன் கூறுகையில், எனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் 30 சென்ட் அளவில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிறைந்துள்ளது. இந்த பண்ணைக்குட்டையில் உள்ள நீரை வைத்து நெல் பயிரிடப்பட்டுள்ளது. நான் கடந்த பத்து வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். 

முதல்–அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள எனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகள் மூலம் விவசாயம் செய்வதற்கு முழு ஈடுபாட்டுடன் திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று மற்ற விவ சாயிகளும் தங்கள் விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்து அதிகப்படியான சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்கி லாபம் அடைந்து பயன் பெறலாம் என்றார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top