8 November 2013

அறிமுக போட்டியில் அபார சதம் அணியை மீட்டார் ரோகித் ஷர்மா

அறிமுக போட்டியில் அபார சதம் அணியை மீட்டார் ரோகித் ஷர்மா




கொல்கத்தா : 

அறிமுக டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் விளாசிய ரோகித் ஷர்மா, சரிவில் இருந்து இந்திய அணியை மீட்டார். ரோகித் , அஷ்வின் இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 198 ரன் சேர்த்தனர். இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 234 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்திருந்தது.

தவான் 21, விஜய் 16 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். தவான் 23 ரன் எடுத்து ஷில்லிங்போர்டு சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து விஜய் 26 ரன் எடுத்த நிலையில் ஷில்லிங்போர்டு பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் களமிறங்கினார். புஜாரா , சச்சின் நிதானமாக விளையாடி 22 ரன் சேர்த்தனர்.

புஜாரா 17 ரன் எடுத்து  காட்ரெல் வேகத்தில் விக்கெட் கீப்பர் ராம்தின் வசம் பிடிபட்டார். இந்தியா 79 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. மேற்கொண்டு 3 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் சச்சின் 10, கோஹ்லி 3 ரன்னில் ஷில்லிங்போர்டு சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 83 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் அறிமுக வீரர் ரோகித் ஷர்மா , கேப்டன் டோனி இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். 20 ஓவர்கள் தாக்குப் பிடித்த இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தது. டோனி 42 ரன் எடுத்து (63 பந்து, 5 பவுண்டரி) பெஸ்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியை 200 ரன்னுக்குள் சுருட்டிவிடலாம் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

ஆனால், ரோகித் , அஷ்வின் ஜோடி பொறுப்புடன் பொறுமையாக விளையாடி அதை முறியடித்தது. இவர்களைப் பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்திய ரோகித், தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தார்.

சாதனை நாயகன் சச்சினின் ஆசீர்வாதத்துடன் இந்திய அணி தொப்பியை பெற்றுக்கொண்ட ரோகித், அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

இந்த சாதனையை நிகழ்த்தும் 14வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. மறுமுனையில் அஷ்வின் அரை சதம் விளாச இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ரோகித் 127 ரன் (228 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 92 ரன்னுடன் (148 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கைவசம் 4 விக்கெட் இருக்க, இந்திய அணி 120 ரன் முன்னிலையுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.

சச்சினுக்கு  சர்ச்சைக்குரிய அவுட்

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் முதல் இன்னிங்சில் நேற்று களமிறங்கிய சச்சின் 23 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரியுடன் 10 ரன் எடுத்திருந்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்க, பெரிய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுழல் ஷில்லிங்போர்டு வீசிய 29வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட சச்சின் எல்பிடபுள்யு ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

டிவி ரீப்ளேயில் அந்த பந்து ஸ்டம்புகளை தாக்காமல் உயரே செல்வது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், நடுவரின் தவறான கணிப்பால் சச்சின் அவுட் ஆனார். நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் டிஆர்எஸ் விதிமுறையை இந்திய கிரிக்கெட் வாரியமும் வீரர்களும் தொடர்ந்து எதிர்த்து வருவதால், நடப்பு தொடரில் அது கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஆர்எஸ் வாய்ப்பு இருந்திருந்தால் சச்சின் அவுட் ஆவதில் இருந்து தப்பித்திருக்கலாம்.

ஸ்கோர் விவரம்

வெ. இண்டீஸ் முதல் இன்னிங்ஸ் 234
இந்தியா முதல் இன்னிங்ஸ்
தவான்    (பி) ஷில்லிங்போர்டு    23
எம்.விஜய்    (எஸ்டி.) ராம்தின் (பி) ஷில்லிங்போர்டு    26
புஜாரா    (சி) ராம்தின் (பி) காட்ரெல்    17
சச்சின்    எல்பிடபுள்யு (பி) ஷில்லிங்போர்டு    10
கோஹ்லி    (சி) பாவெல் (பி) ஷில்லிங்போர்டு    3
ரோகித்    (ஆட்டமிழக்கவில்லை)    127
டோனி    (சி) ராம்தின் (பி) பெஸ்ட்    42
அஷ்வின்    (ஆட்டமிழக்கவில்லை)    92
உதிரிகள்        14
மொத்தம்    (6 விக்கெட், 102 ஓவர்)    354
விக்கெட் வீழ்ச்சி: 1,42, 2,57, 3,79, 4,82, 5,83, 6,156.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு: பெஸ்ட் 14,0,53,1, காட்ரெல் 15,3,53,1, ஷில்லிங்போர்டு 41,8,130,4, பெருமாள் 20,1,54,0, சம்மி 12,1,52,0.

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர்கள்


வீரர் 
ரன்
எதிரணி
களம்
ஆண்டு
1
லாலா அமர்நாத்   
118
ENG
மும்பை
1933
2
தீபக் ஷோதான்   
110
PAK
கொல்கத்தா
1952
3
கிரிபால் சிங்   
100*
NZ
ஐதராபாத்
1955
4
அப்பாஸ் அலி பெய்க்   
112
ENG
மான்செஸ்டர்
1959
5
ஹனுமந்த் சிங்   
105
ENG
டெல்லி
1964
6
ஜி.விஸ்வநாத்   
137
AUS
கான்பூர்
1969
7
சுரீந்தர் அமர்நாத்   
124
NZ
ஆக்லாந்து
1976
8
முகமது அசாருதீன்   
110
ENG
கொல்கத்தா
1984
9
பிரவீன் ஆம்ரே   
103
SA
டர்பன்
1992
10
சவுரவ் கங்குலி   
131
ENG
லார்ட்ஸ்
1996
11
வீரேந்தர் சேவக்   
105
SA
புளோயம்போன்டீன்
2001
12
சுரேஷ் ரெய்னா   
120
SL
கொழும்பு 
2010
13
ஷிகார் தவான்   
187
AUS
மொகாலி
2013
14
ரோகித் ஷர்மா   
127*
WI
கொல்கத்தா
2013


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top