6 November 2013

கவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு ஆஸ்பத்திரியில் அனுமதி

கவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு ஆஸ்பத்திரியில் அனுமதி



பைவ் ஸ்டார், ஒற்றன், பாய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர், சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் ஆபரேஷன்' செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை.

சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நேற்று முன்தினம் அவர் திடீர் என்று மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

ஆஸ்பத்திரியில் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது. சுய நினைவை இழந்து, 'கோமா'வில் மூழ்கினார். சிட்டிபாபுவின் மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top