13 November 2013

பொங்கலுக்கு ஜனவரி 12ம் தேதி செல்ல ரயிலில் இன்று முன்பதிவு செய்யலாம்

பொங்கலுக்கு ஜனவரி 12ம் தேதி செல்ல ரயிலில் 
இன்று முன்பதிவு செய்யலாம்


சென்னை: 

பொங்கல் பண்டிகை கொண்டாட ஜனவரி 12ம் தேதி ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது.ஜனவரி 13ம் தேதி போகி, 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளன. 

போகிக்கு முன்னதாக ஜனவரி 11 சனிக்கிழமை, ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை நாட்கள். எனவே பலரும் ஜனவரி 10ம் தேதியே சொந்த ஊருக்கு ரயில் ஏற ஆர்வம் காட்டுகின்றனர். 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.எனவே ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை ஊருக்கு செல்பவர்களுக்கான முன்பதிவு நேற்று முன்தினமும், ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்பவர்களுக்கான முன்பதிவு நேற்றும் தொடங்கின. 

தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து விட்டன. ரயில்வே முன்பதிவு மையங்களில் காத்திருப்பவர்களை விட இணையதளம் முன்பதிவு செய்பவர்களுக்கே அதிக எண்ணிக்கை இடங்கள் கிடைக்கின்றன.  நேற்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் முன்பதிவு மையங்களில் காத்திருந்தவர்கள் வழக்கம் போல் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிக் கொண்ட முன்பதிவு இடங்கள் சேரன், நீலகிரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 10 நிமிடங்களில் அதாவது நேற்று காலை 8.10 மணிக்கெல்லாம் முடிந்து விட்டன. மற்ற ரயில்களில் 10 முதல் 60 நிமிடங்களில் இடங்கள் தீர்ந்தன.இந்த ரயில்களில் 2ம்வகுப்பு தூங்கும் வசதிக் கொண்ட இடங்கள் காத்திருப்பு பட்டியலின் எண்ணிக்கை 300யை தாண்டியதால் முன்பதிவே நிறுத்தப்பட்டது. 

அதேபோல் 3 அடுக்கு ஏசி இடங்களை பொறுத்தவரை 3 ரயில்களிலும் காத்திருப்பு, ஆர்ஏசியாக உள்ளன. ஜனவரி 10, 11ம் தேதி சென்னையில்  இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லலும்  கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், பழனி, மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில்களில்  காத்திருப்பு பட்டியல்களிலும் இடம் கிடைக்காது.

அதேநேரத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் அனந்தபுரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில்  நேற்று மாலை 6.45 மணி நிலவரப்படி 2ம் வகுப்பு தூங்கும் வசதிக் கொண்ட இடங்களுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 200யை தாண்டி விட்டது.  

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்பு பட்டியல் உள்ளவர்களின் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளன.பொதுவாக 60 நாட்களுக்கு முன் முன்திவு செய்யும்போது பகல் நேர உட்காரும் வசதிக் கொண்ட ரயில்களில் முன்பதிவு இடங்கள் எளிதில் நிரம்பாது.

ஆனால் இந்த முறை சென்ட்ரலில் இருந்து காலையில் புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜனவரி 11ம் தேதி காத்திருப்பு பட்டியலிலும் இடம் இல்லை. மதியம் புறப்படும் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜனவரி 10ம் தேதி முன்பதிவு செய்ய இடமில்லை. 

ஆனால் பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜனவரி 10,11ம் தேதிகளில்  நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன.கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் வழியாக செல்லும் மங்களூர் மெயில், திருவனந்தபுரம் மெயில், ஆலப்புழை எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்,  வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து ரயில் ஏற இடங்கள் இல்லை, 

ஜனவரி 12ம் தேதி சென்னையில் இருந்து செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஜனவரி 13ம் தேதி செல்வதற்கு நாளை தொடங்குகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top