30 October 2013

அஜித்தின் ஆரம்பம் படத்தை திரையிட தடை

அஜித்தின் ஆரம்பம் படத்தை திரையிட தடை கோரி வழக்கு



சென்னை: 

          அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக் சர்ஸ் சார்பில் கே.கண்ணன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: ‘ இனிதான் ஆரம்பம் என்ற தலைப்பில் தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இந்த படத்தின் பாடல் பதிவும் நடந்துவிட்டது.

இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி பதிவு செய்தேன்.படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் ‘ஆரம்பம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே, நான் பதிவு செய்த பெயரை விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த ஆரம்பம் என்ற பெயரை திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 14வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top