20 October 2013

மொகாலியில் டோனி விஸ்வரூபம் வீண் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா

 மொகாலியில் டோனி விஸ்வரூபம் வீண் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா

 
மொகாலி:


             ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலிய அணி 2&1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது.

 
 
தவான் 8, ரோகித் 11 ரன் எடுத்து வெளியேற இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஜான்சன் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் ரெய்னா (17 ரன்) பெவிலியன் திரும்பினார்.யுவராஜ் ஏமாற்றம்: உள்ளூர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கிடையே உள்ளே வந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், தான் சந்தித்த முதல் பந்திலேயே ‘தங்க முட்டை’ போட்டு விரக்தியுடன் வெளியேற, இந்திய அணி 76 ரன்னுக்கு முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.மிகவும் இக்கட்டான கட்டத்தில் கோஹ்லியுடன் கேப்டன் டோனி இணைந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது. கோஹ்லி 68 ரன் எடுத்து (73 பந்து, 9 பவுண்டரி) அவுட் ஆனார்.
அடுத்து வந்த ‘சர்’ ஜடேஜா 2 ரன் மட்டுமே எடுத்து சர்ரென்று வெளியேற, இந்தியா 31.3 ஓவரில் 154 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்தது. இந்திய அணி 200 ரன்னாவது தாண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், டோனிக்கு கை கொடுத்தார் அஷ்வின். 35 பந்துகள் தாக்குப்பிடித்த அஷ்வின் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் 10, வினய் குமார் (0) வெளியேறினர். டோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. டோனி 139 ரன் (121 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), இஷாந்த் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து தோற்கும் நிலையில் இருந்தது.


இந்த நிலையில், இஷாந்த் 48வது ஓவரில் பாக்னருக்கு 4, 6, 6, 2, 6, 6 என 30 ரன்னை தாரை வார்க்க, ஆட்டம் ஆஸி.க்கு சாதகமானது. கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட பாக்னர் அமர்க்களமாக சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார். ஆஸி. அணி 49.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்து வென்றது. பாக்னர் 64 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), வோஜஸ் 76 ரன்னுடன் (88 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டன் டோனியின் அதிரடி ஆட்டம் இஷாந்த் ஷர்மாவின் பொறுப்பற்ற பந்துவீச்சால் வீணானதில், இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஆஸ்திரேலியா 2&1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது ஒருநாள் போட்டி 23ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.

மொகாலியில் முதல் சதம் சச்சின் சாதனை தகர்ப்பு

மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை கேப்டன் டோனிக்கு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 139 ரன் விளாசிய டோனி இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 99 ரன் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை டோனி நேற்று தகர்த்தார்.1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்டேடியத்தில், நேற்றைய போட்டிக்கு முன் வரை 21 ஆட்டங்கள் நடந்திருந்தன. அவற்றில் 5 சதம் விளாசப்பட்டிருந்தாலும், எல்லாமே வெளிநாட்டு வீரர்கள் அடித்த சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையும் டோனிக்கே சொந்தமாகி உள்ளது.

9வது சதம்...
இந்திய அணி கேப்டன் டோனி, ஒருநாள் போட்டிகளில் தனது 9வது சதத்தை நேற்று பூர்த்தி செய்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் 8வது சதத்தை விளாசி இருந்தார்.

வலியை வென்றார்
இந்திய அணி 13 ஓவரில் 76 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில் களமிறங்கிய டோனி, 14வது ஓவரின் 2வது பந்தை கோஹ்லி தட்டிவிட்டு ரன் எடுக்க அழைக்க... கணுக்கால் சுளுக்கிக் கொண்டு ஓட முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளானார். அணி மருத்துவர் ஓடி வந்து அவசர சிகிச்சை அளித்த பிறகு, வலியையும் பொருட்படுத்தாமல் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு இமாலய ஸ்கோரை அளித்தார்.

லைப் கிடைத்தது
டோனி 105 ரன் எடுத்திருந்தபோது, வாட்சன் வீசிய 49வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்தார். ஆஸி. கேப்டன் பெய்லி அந்த மிக எளிய கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது டோனிக்கு சாதகமாக அமைந்தது. பாக்னர் வீசிய கடைசி ஓவரில் அவர் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாச இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்னை தாண்டியது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top