28 November 2013

கள்ளக்காதலி குடும்பத்தை கொன்று குவித்த கொடூரனுக்கு தமிழகத்தை உலுக்கிய இரட்டை கொலையில் தொடர்பு

கள்ளக்காதலி குடும்பத்தை கொன்று குவித்த கொடூரனுக்கு 
தமிழகத்தை உலுக்கிய இரட்டை கொலையில் தொடர்பு




திருச்சி: 

          கள்ளக்காதலியின் கணவன், மகன், மகள் ஆகியோரை கொலை செய்த சம்பவத்தில் போலீசில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளி திருச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளிட்ட 2 பேரை எரித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி யமுனா. இவர்களது மகள் சத்யா (24), மகன் செல்வகுமார்(22). இவர்களுடன் யமுனாவில் தாய் சீதாலட்சுமியும் வசித்தார்.

யமுனாவுக்கு ஜாதகம் பார்ப்பதில் நம்பிக்கையுண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்,  ஜாதகம் பார்க்க சென்றபோது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜோதிடர் கண்ணனுக்கும் யமுனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த தங்கவேல் இருவரையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் யமுனா இருவரும் சேர்ந்து தங்கவேலுவை அடித்துக்கொலை செய்து, சமயபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மூட்டையாக கட்டி வீசினர். தனது கணவர் பற்றி கேட்ட உறவினர்களிடம் அவர் அந்தமான் சென்ற போது போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கூறி யமுனா சமாளித்து வந்தார்.

இந்த நிலையில் யமுனாவிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்தை கண்ணன் விற்க முயன்ற பிரச்னையில், யமுனாவின் மகன் செல்வக்குமார் மற்றும் மகள் சத்யா ஆகியோர் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக யமுனா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலன் கண்ணனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலையாளி கண்ணன் நேற்று சிபிசிஐடி போலீசில் திடீரென சரண் அடைந்தார். தன்னை திருவானைக்காவல் இரட்டை கொலை தொடர்பாக போலீசார் தேடி வருவதாக கூறி சரண் அடைந்தார். அப்போது அவர் சொன்ன தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 2007ம் ஆண்டு  வையம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது டிரைவர் சக்திவேல் ஆகியோர் காருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய இந்த இரட்டை கொலைகளை தானும் யமுனாவும் சேர்ந்து செய்தோம் என்பது கண்ணன் கூறிய தகவல். 

ஆறு ஆண்டாக எவ்வித துப்பும் கிடைக்காத இந்த இரட்டைகொலை வழக்கில், கண்ணனே அதிர்ச்சிகரமான தகவலை சொன்னதைக்கேட்டு பரபரப்பு அடைந்த போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.  அவர்கள் விரைந்து வந்து கண்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கண்ணன் கூறியதாக
சிபிசிஐடி போலீசார் தெரிவித்த தகவல்:

யமுனாவின் கணவர் தங்கவேல் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், அவருக்கு பலரது நட்பு கிடைத்தது. அப்போது தொழில் ரீதியாக ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜிம் இவரது நண்பரானார். அப்போது யமுனாவும், நானும் கள்ளக்காதலர்கள். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த நிலையில், எங்கள் கள்ளக்காதல் விவகாரம் தங்கவேலுக்கு தெரியவந்து பெரிய தகராறே ஏற்பட்டுவிட்டது.

அப்போதுதான் கடந்த 2006ல் நானும், யமுனாவும் சேர்ந்து அவளது கணவர் தங்கவேலுவை கொலை செய்தோம். ஆனால் துரைராஜை கொலை செய்வேன் என்று அப்போது நினைக்கவில்லை. போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி அந்தமான் சிறையில் தங்கவேலு உள்ளதாக தகவல் பரப்பியநிலையில், சில வாரங்களாக தங்கவேலு தன்னை பார்க்க வராததால் அவரை தேடி துரைராஜ், யமுனா வீட்டிற்கு வந்தார்.

யமுனாவிடம் விவரம் கேட்டறிந்த துரைராஜ் அதன்பின்  ஆறுதல் கூறுவதுபோல், அடிக்கடி யமுனா வீட்டிற்கு வர ஆரம்பித்தார். தங்கவேலை கொலை செய்தநிலையில் இனி எப்போது வேண்டுமானாலும் யமுனா வீட்டிற்கு செல்லலாம் என்று இருந்த எனக்கு, துரைராஜ் அடிக்கடி யமுனா வீட்டிற்கு வந்த பிடிக்கவில்லை. இந்த விவகாரம் எனக்கு கோபத்தை கிளப்பியது.

யமுனா சரியாக பேசாமல் இருந்தாலும் துரைராஜ் வீட்டிற்கு அடிக்கடி வருவதை நிறுத்தவில்லை. மேலும் ஒரு முறை நான் யமுனா வீட்டில் இருந்ததை பார்த்த து¬ராஜ்  யார் இவன், கண்ட நபர்களை எல்லாம் ஏன்  வீட்டிற்குள் விடுகிறாய்?  என சத்தம் போட்டார்.

இதனால் துரைராஜ் மீது மேலும் கோபம் ஏற்பட்டது. எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த துரைராஜை தீர்த்துக்கட்டுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றே தோன்றியது. எனவே அவரை கொலை செய்ய நானும், யமுனாவும் திட்டமிட்டோம். அதன் படி கடந்த 22.1.2007ம் தேதி மாலை துரைராஜின் செல்போனுக்கு எனது  நம்பரில் இருந்து யமுனா பேசினாள். இரவு வீட்டிற்கு வருமாறு அவர் துரை ராஜை அழைத்தாள்.

திட்டமிட்டபடி அன்று இரவு சுமார் 10 மணிக்கு து¬ராஜ் தனது கார் டிரைவர் சக்திவேலுவுடன் வந்தார். நானும், எனது நண்பர்கள் 2 பேரும் இரும்பு கம்பியால் அடித்து இருவரையும் கொலை செய்தோம். பின்னர் இருவரையும் மூட்டைகளாக கட்டி அவரது காரிலேயே ஏற்றினோம். தோகமலை வழியாக வையம்பட்டி வந்து ரோட்டின் ஒரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியதுபோல் காரை நிறுத்தினோம். காரு டன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு வந்து விட்டோம் என கூறியுள்ளார்.

கண்ணன் அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சிபிசிஐடி போலீசார் துரைராஜ் கொலை சம்பவத்தில் கண்ணனுக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கண்ணன் சரண் அடைந்ததன் மூலம் கடந்த 6 வருடத்திற்கும் மேலாக கிடப்பில் கிடந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top