காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் தந்த நீங்கள்
பாஜ.வுக்கு 60 மாதம் வாய்ப்பு தாருங்கள்
ஜான்சி:
‘‘காங்கிரஸ் ஆட்சி செய்ய 60 ஆண்டுகள் கொடுத்த நீங்கள், பாஜ.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு கொடுத்து பாருங்கள்’’ என்று மக்களுக்கு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள பந்தல்கண்டில் பாஜ தேர்தல் பிரசார பேரணியும், பொதுக்கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் எந்த சலுகையும் பந்தல்கண்டை வந்தடைவதில்லை.
இந்த பகுதியில் நிலவும் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் வாக்குறுதியை அளிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்யும் எங்கள் கட்சியின் சிவராஜ் சவுகான், இந்த நிதியை முறையாக பயன்படுத்தி வருவதால், விவசாய உற்பத்தி மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது. பிரதமர் தலைமையிலான திட்டக் கமிஷனும் இதை உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியினர் கொள்ளை அடிப்பதில்தான் நிபுணர்கள். சமாஜ்வாடி கட்சியை உருவாக்கிய ராம் மனோகர் லோகியா இருந்திருந்தால் வெட்கி தலை குனிந்திருப்பார். வறுமை ஒழிப்பு பற்றியோ, ஏழைகள், விவசாயிகள் நலனை பற்றியோ காங்கிரசுக்கு துளியும் கவலையில்லை.

காங்கிரசின் அராஜகமும், சமாஜ்வாடியின் குடும்ப அரசியலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தனிநபர் துதியும், மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யாது. சிறந்த நிர்வாகி என்ற அனுபவத்தின் அடிப்படையில் கேட்கிறேன். காங்கிரஸ் ஆட்சி செய்ய 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.இவ்வாறு மோடி பேசினார்.
0 comments