13 September 2013

ரிட்டிக் (ஆங்கிலம்) - திரை விமர்சனம்

ரிட்டிக் (ஆங்கிலம்)  - திரை விமர்சனம் 

 



வேற்றுகிரகவாசியான ரிட்டிக் (வின் டீசல்) இன்னொரு கிரகத்தில் மறைந்து வாழ்கிறார். மிக வெப்பமான அந்த கிரகத்தில் வாழ்வது கொடூரமானது. ரிட்டிக்கை தேடி இரண்டு விண் கப்பல்கள் அந்த கிரகத்துக்கு வருகிறது.

ஒன்றில் அவரை பிடிக்க வரும் கூலிப்படை இருக்கிறது. மற்றொன்றில் ரிட்டிக்கின் பால்ய நண்பன் தலைமையிலான படை இருக்கிறது. 


இதற்கிடையில் அந்தக் கிரகத்தில் திடீரென்று கடுமையான மழை பெய்கிறது. அப்போது பூமிக்குள்ளிருந்து வினோத மிருகங்கள் கிளம்பி இவர்களை அழிக்க வருகிறது. ரிட்டிக்கை எதிரிகள் பிடித்தார்களா, வினோத மிருகங்களுக்கு பலியானார்களா என்பது மீதி கதை. 

ஹாலிவுட்டிலும் கதை பஞ்சம் போலிருக்கிறது. அதனால்தான் இப்படி ஒரு மொக்கையான கதையை தேர்வு செய்து படமாக்கி இருக்கிறார்கள். ஹீரோ, வின் டீசல் மொட்டை தலை, வினோத கண்கள் என வித்தியாசமாக இருக்கிறார். படு பயங்கரமாக சண்டை போடுகிறார். இரண்டு குரூப்பையும் எதிர்த்து போராடுகிறார். அப்படி இருந்தும் ஒரு பெண்ணால்தான் இறுதியில் உயிர் பிழைக்கிறார்.

கூலிப்படைத் தலைவன், நான்கு அடியாட்களை வைத்துக் கொண்டு ஏதோ ராணுவமே வைத்திருக்கிற மாதிரி பில்டப் கொடுக்கிறார். ரிட்டிக்கின் நண்பன், நல்லவனா கெட்டவனா என்பது கடைசிவரைக்கும் தெரியவில்லை. 

ஆபத்தில் ரிட்டிக்கை விட்டுவிட்டு தப்பி வருகிறார். கிளைமாக்சில் அவரை காப்பாற்றுகிறார். நல்லவேளை ரிட்டிக்கை தேடிவரும் குரூப்பில் ஒரு பெண் இருந்தார். இல்லாவிட்டால் ஆண்கள் மட்டுமே நடிக்கும் சிறப்பு படமாக ஆகியிருக்கும். 



அந்த பெண்ணும், அவளது குரூப் லீடரும் பேசும் வசனங்கள் அனைத்தும் ‘டிரிபிள் ஏ’ ரகம். கதை அப்படி இப்படி இருந்தாலும் அதை படமாக்கி இருக்கும் விதம் அபாரம். 



ஒரு ராட்சத குகையில் மறைந்திருக்கும் டைனோசர் போன்ற வினோத மிருகத்தை ரிட்டிக் புத்திசாலித்தனமாக வீழ்த்துவது, கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காலில் விழும் கத்தியை கொண்டு கூலிப்படை தலைவனின் தலையை தர்ப்பூசணியை சீவுவது மாதிரி சீவி எறிவது போன்ற பல காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் காதை பிளக்கிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top