அமெரிக்க ஓபன் டென்னிஸ்
அரையிறுதியில் அதிரடி ஆட்டக்காரர் செரீனா - லீ னா மோதல்
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் செரினா வில்லியம்ஸ், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுவரெச் நவரோவை சந்தித்தார்.
ஐந்தாவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பையை வெல்லும் நோக்கில் மிக ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் விளையாடிய செரினா வில்லியம்ஸ் 6-0, 6-0 என்ற நேர்செட்டுகளில் நவரோவை எளிதில் வெற்றிப்பெற்றார். இப்போட்டியை அவர் 52 நிமிடங்களில் முடித்தார்.
அடுத்து இன்று நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ், சீனாவின் லீ னா-வை சந்திக்கிறார்.
நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இரட்டையர் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள், நடப்பு சாம்பியன்களும் முதல் நிலை ஆட்டக்காரர்களுமான இத்தாலியின் சாரா எர்ரானி மற்றும் ராபெர்டா வின்சியுடன் மோதினர்.
இதில் வில்லியம்ஸ் சகோதரிகள் 6-3, 6-1 என்ற செட்டுகளில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
0 comments