20 June 2013

தமிழகத்தில் கேண்டீன் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய கிளாசிக் பேருந்துகள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கேண்டீன் மற்றும்  கழிப்பறை வசதியுடன் கூடிய 

கிளாசிக் பேருந்துகள் 

 ஜெயலலிதா தொடங்கி வைத்தார்




சென்னை, ஜூன்.20:

தமிழ்நாடு முழுவதும் 189 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கோட்டையில் இன்று காலை நடந்தது. புதிய பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சென்னை- ஸ்ரீரங்கம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய கிளாசிக் பஸ் விடப்பட்டது. இந்த பஸ்சில் கேண்டீன் வசதி, கழிப்பறை வசதி இடம் பெற்று உள்ளது. இந்த “கிளாசிக்” பஸ்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆர்வமுடன் பார்வையிட்டார். இது தவிர புதுப்பிக்கப்பட்ட 55 பஸ்கள், கூடுதலாக 66 வழித்தடங்களில் மகளிர் பஸ்கள் ஆகியவற்றையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பஸ் டிரைவருக்கு சாவிகளையும் வழங்கினார். போக்குவரத்து கழக புறநகர் பஸ்களில் மாதாந்திர சலுகை கட்டணம் பெறும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். குழுவாக பயணம் செய்யும் பயணிகளுக்காக 10 சதவீத சலுகை பயண பதிவு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். 

இதையொட்டி புதிதாக “அம்மா ரத்ததான திட்டம்” என்ற ரத்ததான திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழகங்களில் இருந்து ஓய்வு பெற்ற 822 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகைகளையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது 21 புதிய மண்டலங்கள் உள்ளன. புதிதாக ஊட்டி, கரூர், தூத்துக்குடி, நாகை ஆகிய பகுதிகளிலும் மண்ட லங்களை தொடங்கி வைத்தார்.

 ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் பெருந்துரை மருத்துவ கல்லூரியில் புதிய சி.டி.ஸ்கேன்,

 54 பகுதி அலுவலகங்களுக்கு புதிய ஜீப்புகள்,

திருச்சி கிழக்கு, நாமக்கல் தெற்கு, பூந்தமல்லி, சங்கரன் கோவில், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார். 

திருப்பத்தூர், சூலூர், முசிறி, சீர்காழி, அருப்புக் கோட்டை ஆகிய 5 புதிய அலுவலகங்கள்,

தென்காசி, செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம்,

வள்ளியூர், குளித்தலை பகுதி அலுவலக ஓட்டுனர் தேர்வு தளம்

ஆகிய திட்டங்களையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, போக்கு வரத்து துறை செயலாளர் பி.கே. பிரசாத், கமிஷனர் பிரபாகர் ராவ், நிரஞ்சன் மார்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top