அஞ்சலி, வரலட்சுமி, சதாவுடன் ஆட்டம்
மத கஜ ராஜா கவர்ச்சி படமா?- விஷால்
விஷால் நடித்த மதகஜராஜா படம் நாளை மறுநாள் (6-ந்தேதி) ரிலீசாகிறது. இதில் நாயகிகளாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சதாவும் குத்தாட்டம் ஆடியுள்ளார். இவர்களின் கவர்ச்சி ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.
இது கவர்ச்சியான படமா? என்று விஷாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மத கஜ ராஜா படத்தில் பாடல்களில்தான் கவர்ச்சி இருக்கும். அஞ்சலியும், வரலட்சுமியும் இப்படத்தின் நாயகிகள். சதா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார். நானும், சந்தானமும் நடித்துள்ள காமெடி சீன்கள் நிச்சயம் ரசிகர்களை சிரிக்க வைக்கும்.
சமர், பட்டத்து யானை படங்களை தொடர்ந்து இப்படம் வருகிறது. இதுவும் வெற்றி படமாக இருக்கும். அடுத்து பாண்டியநாடு படத்தில் நடிக்கிறேன். மதகஜராஜா குடும்ப பாங்கான கமர்சியல் படமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments