25 September 2013

அனன்யா நடிக்க தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள ‘காக்டெயில்

அனன்யா நடிக்க தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள ‘காக்டெயில்




மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘காக்டெயில்‘ படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஸ்பெல் பவுண்டு பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனரை தேர்ந்தெடுப்பதை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர்களாக சீனு மற்றும் நிகேஷ்ராம் நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை.

படம் குறித்து இயக்குனர் பரதனிடம் கேட்டபோது, திரைக்கதைக்கு சவாலான படம் என்பதால் திரைக்கதையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். சிறப்பான தமிழ் படமாக இது வரும். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது என்றார்.

மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவ்வாறு வெளிவந்த ‘காவலன்’, ‘சென்னையில் ஒருநாள்’ ஆகிய படங்கள் தமிழில் சக்கை போடு போட்டன. மேலும் ‘ஜன்னல் ஓரம்’, ‘புலிவால்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, மாலினி 22 பாளையங்கோட்டை’ ஆகிய படங்கள் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் சேர்ந்துள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top