உதயநிதி ஜோடியாகிறார் காஜல் அகர்வால்

இதையடுத்து தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
தன்னுடைய முதல் மற்றும் இரண்டு படங்களிலும் முன்னணி நாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் உதயநிதிக்கு, மேலும் ஒரு ஹாட்ரிக் சந்தோஷம் கிடைத்துள்ளது.
‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கு பிறகு, புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் ‘நண்பேண்டா’ படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் உதயநிதி-க்கு நண்பனாக நடிப்பது... வேறு யார்? சந்தானம்தான். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.
0 comments