8 August 2013

சேரன் மகள் காதல் விவகாரம் காதலன் சந்துரு குடும்பம் திட்டமிட்டு பணம் பறிக்கும் கும்பல் இயக்குனர் அமீர் ஆதாரங்களை வெளியிட்டார்

சேரன் மகள் காதல் விவகாரம் 
காதலன் சந்துரு குடும்பம் திட்டமிட்டு பணம் பறிக்கும் கும்பல்
 இயக்குனர் அமீர் ஆதாரங்களை வெளியிட்டார் 

 

சென்னை : 

                   இயக்குனர் சேரன் மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த சந்துருவை காதலிப்பது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் நீதிபதி உத்தரவின்படி, தாமினி அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சந்துரு மற்றும் அவர் குடும்பத்தினர் மீது இயக்குனர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சேரன் மகள் பிரச்னையை கேள்விப்பட்டு அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கத்தான் நாங்கள் சென்றோம். ஆனால் சந்துரு பற்றி விசாரித்த பிறகுதான் அவரது குற்றப் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தோம். 

இப்போது அசைக்க முடியாத பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சேரன் மகள் தவறான இடத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்குத்தான் இந்த முயற்சி. சந்துரு குடும்பம் திட்டமிட்டு பணம் பறிக்கும் கும்பல். நான்கைந்து வீடுகளில் சந்துருவை வைத்து பெண்களை மயக்கி அந்த பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள்.

சந்துருவின் அக்கா இயற்பெயர் ராதா. இப்போது அவர் தன் பெயரை பத்மா என்கிற கவுரி என்கிறார். அவர் பாத்திமா என்ற பெயரில் வாழ்ந்த கதை எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிபுளி என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது இலியாஸ் என்பருடன் பாத்திமா என்ற பெயரில் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். அவருக்கு நூருல் ஹரிதா, நூருல் சுபைதா என்ற இரு குழந்தைகளை பெற்றிருக்கிறார்.

இலியாஸ் சொத்துக்களை பறிக்க முஸ்லிம் குடும்பம் போன்று காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சந்துருவின் பெயர் அப்துல். அவரது அம்மாவின் பெயர் நபீசா பீவி. பத்மா அப்போது பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்திருக்கிறார்.

அதன் நகல் எங்களிடம் உள்ளது. இலியாஸ் இறந்த பிறகு அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடியிருக்கிறார். அவருடன் வாழ்ந்ததற்காக 300 பவுன் நகையும், 30 லட்சம் ரொக்கமும், விஜயவாடாவில் ஒரு வீடும் கொடுத்து இலியாஸ் குடும்பத்தினர் செட்டில் செய்திருக்கிறார்கள்.

பத்மா குடும்பத்தினர் இரண்டு பெண்கள் உள்ள குடும்பத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இளைய மகளை தங்கள் வீட்டு பையன்கள் மூலம் மயக்கி தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். மூத்த பெண் என்றால் திருமணம் செய்து வைத்துவிடக்கூடும் என்று கருதி
அவ்வாறு செய்கிறார்கள்.

இளைய பெண் என்றால் பேரம் பேசலாம் என்பது அவர்கள் திட்டம். அப்படித் தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கே.கே.நகர் காவல் நிலையத்தில் 3 லட்சம் செட்டில்மென்ட் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து இது போன்ற புகார்கள் எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை வெளி யில் சொன்னால் சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் வெளியிடவில்லை.

தாமினியின் பேஸ்புக்கை சந்த்ருதான் ஆபரேட் செய்து வருகிறார். 2013க்கு முந்தைய பேஸ்புக் தகவல்களை அழித்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்தால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு முன் சந்துருவுக்கு லோகநாதன், பிரகாஷ் என்ற இரு நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்துள்ள பத்மா, 2013 பிப்ரவரி 10,ம் தேதி சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்திய பாஸ்போர்ட் எது என்ற கேள்வி
எழுந்துள்ளது.

எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களில் இப்போதைக்கு தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளோம். தேவைப்படும்போது இன்னும் ஆதாரங்களை வெளியிடுவோம். 

தாமினியை காப்பாற்றுவதோடு இந்த கும்பலிடம் இனி எந்த பெண்ணும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே இதில் தீவிரம் காட்டுகிறோம். என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ள பத்மா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இவ்வாறு அமீர் கூறினார்.

பேட்டியின்போது இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, சுப்ரமணிய சிவா உடன் இருந்தனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top