24 July 2013

அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் ‘ஆரம்பம்’

அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் ‘ஆரம்பம்’


               ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.
 
இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top