கீழக்கரையில் ஆடு,மாடுகள் பலி பால்பண்ணையில் தீ விபத்து
கீழக்கரை:
கீழக்கரை அகமது தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சந்திரமவுலி. இவர் ஸ்ரீநகர் பகுதியில் பால்பண்ணை நடத்திவருகிறார்.
நேற்று மதியம் இங்குள்ள குடிசை பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதில் 1 மாடு, 2 ஆடுகள் உயிரிழந்தன.
மேலும் அங்கிருந்த கால்நடைகள் படுகாயம் அடைந்தன. அப்போது காற்று வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.
தகவலறிந்த கீழக்கரை தீயணைப்பு வீரர்கள், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கோட்டைச்சாமி, முனீஸ்வரன், ஏட்டு முனியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
விபத்து நடந்த தெரு குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனம் செல்லமுடியவில்லை. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது













0 comments