6 வருடங்களாக மின்கட்டண பாக்கி ரூ.11 லட்சம்
இராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் நடவடிக்கை
பட்டணம்காத்தான்:
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி சேதுபதிநகர்.
இங்கு வடக்கு பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீட்டு மனையிடங்கள் விற்பனை செய்யப்பட்டு வீடுகள் கட்டி பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
அந்த பகுதியில் 247 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த தெருவிளக்குகள் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் கடந்த 6 வருடங்களாக செலுத்தப்படவில்லை.
அந்த பகுதியில் 247 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த தெருவிளக்குகள் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் கடந்த 6 வருடங்களாக செலுத்தப்படவில்லை.
இதையடுத்து தெருவிளக்கு மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்துவிட்டது. இதனால் கடந்த 15 நாட்களாக அந்தபகுதி இருளில் மூழ்கியது.
இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் சித்ராமருது துரித நடவடிக்கை மேற்கொண்டு மின்சார பாக்கி தொகை ரூ.11 லட்சத்தை காசோலையாக செலுத்தினார். அதன்பேரில் உடனே மின்சார வாரியம் மின்இணைப்பை கொடுத்தது. ஊராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டினர்.













0 comments