3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘கல்யாண மன்னன்’
பேஸ்புக் மூலம் கிடைத்த கள்ளக்காதலியோடு 4வது திருமணம்
முதல் மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார்
நெல்லை:
4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘கல்யாண மன்னன்’ குறித்து அவருடைய முதல் மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
வியாபாரி:
வியாபாரி:

பாளையங்கோட்டை தியாகராஜநகர் ஏ.பி.ஏ. பிள்ளை நகரைச் சேர்ந்தவர், பாஸ்கர். அவருடைய மகன் மதிவாணன் (வயது 36). இவர் வீட்டு உபயோக பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரும், பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த அனிதா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவர் மீது அனிதா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–
போலீஸ் கமிஷனரிடம் புகார்
எனது கணவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடம் பணத்தை பறித்து வருகிறார். எனக்கு தெரிந்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார். இது குறித்து நான் கேட்டதால், மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து உதைத்தார்.
கடந்த 8–5–2010 அன்று சரோஜினி என்ற பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, மதுரையில் அவருடன் குடும்பம் நடத்திவிட்டு அவரை விரட்டி விட்டார். பின்னர் களக்காட்டைச் சேர்ந்த மரகதம் என்ற பெண்ணை திருமணம் செய்து, அவரிடம் பணத்தை பறித்துவிட்டு விரட்டினார்.
தற்போது சரிதா என்ற கேரளா பெண்ணை அழைத்து வந்து ஒரு மாதமாக அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் மூலம் கள்ளக்காதல்
மதிவாணனுக்கும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சரிதாவுக்கும் இடையே கம்ப்யூட்டர் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டது. சரிதா மஸ்கட் நாட்டில் இருந்தபோது இந்த காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே திருமணமானவர். கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
மதிவாணன் மீது ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக மஸ்கட் நாட்டில் இருந்து குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு, கேரளாவுக்கு வந்தார். பின்னர் மதிவாணன் அழைத்ததின் பேரில் குழந்தைகளுடன் நெல்லை வந்து, அவருடன் குடும்பம் நடத்தி வருவதாக தெரியவருகிறது. கேரளாவில் இருந்து வந்த போது 30 பவுன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் பணத்துடன் சரிதா வந்ததாகவும் கூறுகிறார்கள்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.













0 comments