தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு: இயக்கம் பாண்டியராஜ் இசை சிம்பு தம்பி குறளரசன்
‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து 'மெரினா’, ’வம்சம்’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ், அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால் தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட் ஆகியிருப்பதால், தனுஷுக்காக தயார் செய்து வைத்திருந்த கதையை சிம்புவிடம் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.
அந்த கதை சிம்புவுக்கு ரொம்பவும் பிடித்துபோக, அதை தானே தயாரித்து ஹீரோவாக நடிக்க போகிறார்.
இந்த படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைத்து இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.













0 comments