9 June 2013

சாம்பியன்ஸ் டிராபி : இங்கிலாந்து அபார வெற்றி

பெல் 91, டிராட் 43, போப்பாரா 46*


இங்கிலாந்து அபார வெற்றி




பர்மிங்காம்:

                                 இங்கிலாந்து அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 48 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இயான் பெல் அதிகபட்சமாக 91 ரன் விளாசினார். பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. ஆஸி. அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக களமிறங்கவில்லை. 

                            அவருக்கு பதிலாக பெய்லி கேப்டன் பொறுப்பேற்றார். இங்கிலாந்து தொடக்க வீரர்களாக கேப்டன் அலஸ்டர் குக், இயான் பெல் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது. குக் 30 ரன் எடுத்து வாட்சன் வேகத்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் வசம் பிடிபட்டார். அடுத்து பெல்லுடன் ஜொனாதன் டிராட் ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்தனர். டிராட் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயான் பெல் 91 ரன் எடுத்து (115 பந்து, 7 பவுண்டரி) பாக்னர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 12, மார்கன் 8, பட்லர் 1 ரன்னில் வெளியேற, இங்கிலாந்து 213 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்தது. கடைசி கட்டத்தில் போப்பாரா , பிரெஸ்னன் ஜோடி பொறுப்புடன் விளையாடி 56 ரன் சேர்த்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன் குவித்தது. 

போப்பாரா 46 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), பிரெஸ்னன் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் மெக்கே, பாக்னர் தலா 2, ஸ்டார்க், வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 


அடுத்து 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அதிரடி வீரர்கள் வார்னர், வாட்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். வார்னர் 9, வாட்சன் 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கேப்டன் பெய்லி 55, பிளக்னர் 54, ஹியூஸ் 30 ரன் எடுத்தனர். 

50 ஓவர் முடிவில் அந்த அணி 221 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 48 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top