சூர்யாவுடன் துருவ நட்சத்திரத்தில் ஜோடி சேருகிறார் அமலா பால்
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஆனால், படத்தின் கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வது என கெளதம் வாசுதேவ் மேனன் குழப்பத்தில் இருந்தார். சமீரா ரெட்டி, ஆண்ட்ரியா, த்ரிஷா என தன்னுடைய முந்தைய படங்களின் நாயகிகளில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர், ஒருவழியாக 'விண்ணைதாண்டி வருவாயா' படத்தில் நடித்த த்ரிஷாவையே, இந்தப் படத்திலும் நாயகியாக்கலாம் என்று நினைத்தாராம்.
ஆனால், அவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்களாம். கதைக்குப் பொருத்தமாக இருப்பதோடு,
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பலமாக இருப்பார் என்றும் ஆலோசனை சொல்லப்பட்டதாம். உடனடியாக அமலாபாலை அழைத்துப் பேசி புக் செய்துவிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன்.
'தலைவா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய பேனரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில் இருக்கிறார் அமலா பால்.
0 comments