இராமநாதபுரம் மாவட்டத்தில்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு
தொழில் திறன் பயிற்சி
இராமநாதபுரம், ஜூன் 21:
இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் வட்டார பகுதிகளில் உள்ள 18 வயது முதல் 35 வரையான படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் தொழில் பிரிவுகளின்கீழ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
பயிற்சி பெற விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், புதுவாழ்வு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட தொகுப்பு அலுவலகங்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.06.2013-க்கும் அந்தந்த வட்டாரங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)க்கு சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
பெறப்படும் விண்ணப்பங்கள் வட்டாரங்களில் நடைபெறும் முகாம்களில் வைத்து பரிசீலனை செய்யப்பட்டு தகுதியிருப்பின் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் இது குறித்த விபரங்களை அறிய தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சிறு சேமிப்பு) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிதிராவிடர் நலம்) ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்து உள்ளார்.
0 comments