இராமநாதபுரம் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில்
உதவி தொகையுடன் பயிற்சி
மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 29-ந்தேதி
இராமநாதபுரம், ஜூன் 21:
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து இராமநாதபுரம் அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் குரு மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பொதுப்பிரிவில் உள்ள தொழில் பிரிவில்
பொருத்துனர்,
இயந்திர வரைவாளர்,
வானொலி மற்றும்
தொலைக்காட்சி மின்னணுவியல்
ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 2 ஆண்டுகள் அளிக்கப்படும்.
இதற்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயர்மேன் பயிற்சிக்கு 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
மகளிருக்கான பிரிவில் டி.டி.பி.ஓ. பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சியும், தையல் வேலை பயிற்சிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு ஓராண்டு பயிற்சியளிக்கப்படும். இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு 14 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். தொழில் பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் கம்ப்யூட்டர், சைக்கிள், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மற்றும் சீருடை, காலனியும் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப் பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 29-ந்தேதியாகும். முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், இராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 04567-231214 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments