மலையாள கவர்ச்சி படத்தில் மீண்டும் மனிஷா கொய்ராலா
சென்னை, ஜுன் 1:
நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல்வன், பம்பாய் படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் தனுஷ் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.
அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்காவில் மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மலையாளத்தில் தயாராகும் 'எடவபதி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், மனிஷா இதில் நடித்து கொடுக்க வருகிறார் என்றும் படத்தின் இயக்குனர் லெனின் ராஜேந்திரன் தெரிவித்தார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு பாதி முடிந்துள்ளது.
0 comments