12 June 2013

சாம்பியன்ஸ் டிராபி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி






லண்டன், ஜூன் 12:

சாம்பியன்ஸ்கோப்பை கிரிக்கெட்டின் 6-வது லீக் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கெயில் மற்றும் ஜார்லஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜார்லஸ் 60 ரன்னிலும், கெயில் 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

பின்னர் வந்த நடுவரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடத் தவறியதால், அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டது. கடைசியில் சமி அதிரடியாக விளையாட, வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடெஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி இந்தியா விளையாடியது.

தொடக்க வீரர்களாக சர்மா மற்றும் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். சர்மா 52 ரன்னிலும், கோலி 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.

இடையில் மழையால் ஆட்டம் பாதிப்படைந்தது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

கார்த்திக் மற்றும் தவான் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

தவான் 102 ரன்கள், கார்த்திக் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சிறப்பாக பந்து வீசிய ஜடெஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் 233/9. ஓவர் 50.

இந்தியா 234/2 . ஓவர் 39.1.

தவான்             102(107)*

ஷர்மா              52(56)

ஜடேஜா            5/36             ஆட்ட நாயகன்     

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top