23 June 2013

இராமநாதபுரம் மாவட்டத்தில் 5,300 பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.25 கோடி நிதி கோரப்பட்டுள்ளது

இராமநாதபுரம் மாவட்டத்தில் 

5,300 பண்ணை குட்டைகள் அமைக்க 

ரூ.25 கோடி நிதி கோரப்பட்டுள்ளது


இராமநாதபுரம், ஜூன் 23:

இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 5,300 பண்ணை குட்டைகள் வெட்ட நபார்டு வங்கியிடம் ரூ.25 கோடி நிதி கேட்டு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வறட்சியை தாங்கி பயிர்களை வளர செய்யும் மிதைலோ பாக்டீரியாவின் பயன்கள் குறித்து பவர் பாயிண்ட் மூலம் கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் துரைசிங் தெரிவிக்கையில், மிதைலோ பாக்டீரியாவை 200 மி.லி ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் பயிர்களுக்கு தெளித்தார் பயிர்கள் 15 நாட்கள் வரை வறட்சியை தாங்கி வளருவதுடன் மகசூலும் 8 முதல் 10 சதம் வரை அதிகமாக கிடைக்கிறது.

இது டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி நல்ல மகசூல் பெற்றிட கேட்டு கொண்டார். இயற்கை முறையில் சம்பங்கி பூ சாகுபடி செய்யும் முறைப்பற்றி திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை கிராமத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான மருதமுத்து மற்றும் வாசுகி ஆகியோர் தெரிவித்தனர். வடிகால் வசதியுள்ள 60 சென்ட் நிலத்தை இயற்கை முறையில் சம்பங்கி பூ சாகுபடி செய்தால் ஒரு வருடத்திற்கு நிகர வருமானம் ரூ.1,42,000 கிடைக்கும் என்றும் இதற்கென்று தனியாக உரம் மற்றும் பூச்சி மருந்து தெளிக்க தேவையில்லை எனவும் தெரிவித்து இதை சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பெறலாம் எனவும் தெரிவித்தார்கள்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டு கொண்டார். மாவட்ட கலெக்டர் விவசாயிகளிடம் கூறுகையில், விவசாயம் என்பது இன்றும், என்றும் லாபகரமான தொழில். தன்னம் பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுத்தி நடத்த வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட நபர்களின் கருத்து காட்சியுடன் கூடிய செயல்விளக்கங்கள் விவ சாயிகளுக்கு தெரிவிக்கப் பட்டது. தமிழக அரசின் சீரிய முயற்சியின் காரணமாக விவசாயிகள் நலன் காப்பதில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை களை உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது.

கிராமப் புறங்களில் பண்ணை குட்டைகள் அமைப்பது அந்தந்த கிராம பஞ்சாயத்து தீர்மான அடிப்படையில் பணிகள் நடைபெறுகிறது. நீர்வடி முகமை மூலம் 1200 பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் 5,300 பண்ணை குட்டைகள் வெட்ட நபார்டு வங்கியிடம் நிதி கேட்டு ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைத்துவிடும். அதன்பின் பணிகள் செயல் படுத்தப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சவுந்தர்ராஜன், வேளாண்மை துணை இயக்குநர் அரிவாசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top