தனுஷ்கோடியில் இலங்கை வாலிபர் கைது
இராமேசுவரம் 17:
தனுஷ்கோடியில் இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ரோந்து
மண்படத்தில் உள்ள இந்திய கடலோரகாவல் படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் ரோந்து சென்றபோது இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு வருவதை பார்த்தனர். அதையடுத்து அந்த படகை பிடிக்க முடியன்றபோது ஒருவர் பட கில் இருந்து தண்ணீரில் குதித்தார். படகில் இருந்த 2பேர் வேகமாக படகை திருப்பி இலங்கைநோக்கி தப்பி சென்றுவிட்டனர்.
பின்னர் தண்ணீரில் தத்தளித்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் யாழ்பாணம் அருகே உள்ள வடமராட்டி பகுதியை சேர்ந்த ரூபகாந்தன் (வயது30) என்பதும் இலங்கையில் நடந்த தேர்தலில் தனது தம்பி பணிபுரிந்ததால் ராணுவம் அவரை பிடித்து சென்றுவிட்டதாகவும் இதனால் உயிருக்கு பயந்து ரூ.75 ஆயிரம் செலுத்தி படகில் இலங்கையில் இருந்து வந்த தாக தெரிவித்தார்.
கைது
இதையடுத்து அவரை கடலோர காவல் படையினர் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் துணைப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ரூபகாந்தனை கைதுசெய்தார். பின்னர் அவர் இராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
0 comments