தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை:
வானிலை ஆய்வு மையம்
சென்னை, நவ. 3:
இலங்கை அருகே வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது குமரி கடலோர பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழையும், மயிலாடியில் 9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் பலத்த மழை பெய்தது. மேலும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மழை நீர் கோயம்பேடு 100 அடி சாலை, மார்க்கெட் ரோடு, திருமங்கலம், தங்கம் காலனி, விருகம்பாக்கம், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. பட்டாசு குப்பைகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன.
வழக்கமாக பட்டாசுகள் மலைபோல் குவியும். இன்று பெய்த மழையால் தெருக்களில் சிதறி கிடந்த பட்டாசு துகள்கள் மழை நீர் வாய்க்காலில் சென்றன.
சில இடங்களில் நேற்று இரவு பெய்த மழையால் தீபாவளி கொண்டாடுபவர்கள் வீடுகளில் வீடுகளின் மாடியில் இருந்து பட்டாசு வெடித்தார்கள்.

0 comments