17 October 2013

ஆருஷி கொலை வழக்கில் இறுதிகட்ட வாதத்தில் முழுவடிவம்

ஆருஷி கொலை வழக்கில் இறுதிகட்ட வாதத்தில் முழுவடிவம்



காஜியாபாத்: 

               பல் மருத்துவ தம்பதியரின் ஒரே மகளான ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜ் கொலை வழக்கில், இறுதி கட்ட வாதம் நடந்துவரும் நிலையில் இந்த வழக்குக்கு முழு வடிவம் கிடைத்துள்ளதாக சிபிஐ வக்கீல் தெரிவித்துள்ளார். 

நொய்டாவை சேர்ந்த பல் டாக்டர் தம்பதியான தல்வாரின் ஒரே மகள் ஆருஷி (14) கடந்த 2008ம் ஆண்டு மே 16ம் தேதி கொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது வீட்டு மொட்டை மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் தல்வார் தம்பதி மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை காஜியாபாத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், இப்போது இறுதி கட்ட வாதம் நடக்கிறது 3ம் நாளான நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு வக்கீல் ஆர்.கே.செய்னி, கூறியதாவது:

          இந்த இரட்டை கொலை வழக்கில் தற்போது முழுவடிவம் கிடைத்துள்ளது. இது திட்டமிட்ட கொலை தான் என்பதை உறுதி செய்ய, ஆருஷி கொலை செய்யப்பட்டுகிடந்த படுக்கையில்  எந்தவித சுருக்கமோ ரத்தக்கறையோ காணப்பட வில்லை. சிபிஐ விசாரணையில், கொலை நடந்த அன்று இரவு தல்வார் தம்பதியரின் அறையில் உள்ள இணையதள சேவையை உபயோகப்படுத்தி பிறகு அணைத்து வைக்கப்பட்டதற்கான ஆதாரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து கொலை நடந்தபோது தல்வார் தம்பதியர் விழித்துக்கொண்டு தான் இருந்தார்கள் என்பது தெளிவாகிறது. எனவே ஆருஷியின் அறையில் நடந்தது தல்வார் தம்பதிக்கு நன்கு தெரிந்துள்ளது. ஆருஷி கொலை செய்யப்பட்டு கிடந்த கட்டிலின் பெட் ஷீட் கசங்கா மல் இருந்துள்ளது. எனவே கொலை செய்த பிறகு பெட்ஷீட் மாற்றப்பட்டுள்ளது. 

மேலும், ஆருஷி உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக் டர் சுனில் தோர், ஆருஷி இறப்பதற்கு முன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ராஜேஷின் அண்ணன் தினேஷ் மூலம் டாக்டர்களான சுஷில் சவ்த்ரி, கே.கே.கவுதம் ஆகியோர் மூலம் உ.பி போலீசாரின் உதவியுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருந்து ஆருஷி கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் தொடர்பு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்ட வாக்கியத்தை நீக்கியுள்ளனர். 

ஆருஷியின் மர்ம உறுப்பை நுபுர் சுத்தம் செய்துவிட்டு அதை மறைத்துள்ளனர். ஆருஷி கொலை செய்யப்பட்டபோது அந்த கட்டிலில் இருந்து பெட்ஷீட்டை சிபிஐ போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதை ஆய்வு செய்த போது ஆருஷியின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக அறிக்கை விளக்குகிறது. மேலும் அந்த பெட்ஷீட்டில் ஹேம்ராஜின் மரபணுவும் ஒத்துப்போவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில், இருந்து ஆருஷியுடன் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜ் பாலியல் உறவு வைத்துக்கொண்டது உறுதி செய்யப்படுகிறது.

இதுமட்டும் அல்லாது, ஆருஷியின் அறையிலேயே ஹேம்ராஜையும் கொலை செய்த வீட்டின் மொட்டை மாடியில் போட்டுள்ளனர். ஹேம்ராஜ் இறந்ததும் சடலத்தை இழுத்து சென்ற இடத்தில் படிந்த ரத்தக்கறைகளை கழுவியதற்கான தடயமும் கிடைத்துள்ளது. 

கொலை நடந்த 3 நாட்களுக்கு பிறகு சிபிஐ அந்த வீட்டை சோதனையிட்டதில், ஹேம்ராஜ் சடலம் இருந்த மொட்டைமாடியின் கதவின் தாழ்ப்பாலில் ரத்தக்கறை இருந்து ள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை சோதனையிட்டதில், அது ஹேம்ராஜின் ரத்தம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்களான பெட்ஷீட் மற்றும் மொட்டை மாடியின் கதவு தாழ்ப்பாலில் படிந்துள்ள ரத்தகறைகள் தொடர்பாக ஆய்வறிக்கையை நொய்டா கூடுதல் மாஜிஸ்திரேட் சஞ்ஜய் சவ்கான் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், இருந்து தல்வார் தம்பதி வீட்டுக்கு வெளியில் இருந்து யாரும் வீட்டுக்குள் புகுந்து அவர்களை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரியவருகிறது. இவ்வாறு வாதாடியதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஷியாம் லால், அக்டோபர் 17ம் தேதி வாதம் மீண்டும் தொடரும் என்று உத்தரவிட்டார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top