படத்திலிருந்து நீக்கினார் ஜீவா
நஸ்ரியா பேரை கேட்டு
ஓட்டம் பிடிக்கும் ஹீரோக்கள்
நஸ்ரியா பேரை கேட்டால் ஹீரோ, இயக்குனர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியாவுக்கு கோலிவுட்டில் வரவேற்பு படுவேகமாக இருந்தது.
ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்ஹா, நீ நல்லா வருவேடா என மளமளவென படங்கள் புக் ஆகின. அவரது கால்ஷீட்டுக்காக மேலும் சில இயக்குனர்களும், ஹீரோக்களும் காத்திருந்தனர். இந்நிலையில் நய்யாண்டி பட பிரச்னை அவருக்கு தடை கல்லாக வந்து சேர்ந்தது.
ஒரு வகையில் இப்பிரச்னை நஸ்ரியாவுக்கு பப்ளிசிட்டியாக அமைந்தாலும் மறுபக்கம் அவரை ஒப்பந்தம் செய்தால் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மறுப்பாரோ, பிரச்னை செய்வாரோ என்ற பயம் இயக்குனர்களுக்கும் ஹீரோக்களும் ஏற்படத் தொடங்கி உள்ளது. தனது அடுத்த படத்தில் நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய ஒரு மாதமாக ஜீவா காத்திருந்தார். ஒருவழியாக கால்ஷீட்டும் வாங்கிவிட்டார்.
ஆனால் நய்யாண்டி பிரச்னையால் அவரும் தற்போது நஸ்ரியா வேண்டாம் வேறு ஹீரோயினை பாருங்கள் என்று கூறி இருக்கிறாராம். கோலிவுட்டில் பரவி இருக்கும் இந்த பயத்தை நஸ்ரியா எப்படி போக்கப்போகிறாரோ என்று அவரது ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.
0 comments