27 October 2013

அடிக்கடி தகராறு:அம்மி கல்லை தலையில் போட்டு மாமியாரை கொன்றார் மருமகள்

அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம்
அம்மி கல்லை தலையில் போட்டு மாமியாரை கொன்றார் மருமகள்


திருவொற்றியூர்: 

        அம்மி கல்லை தலையில் போட்டு மாமியாரை கொலை செய்த மருமகள், போலீசில் சரண் அடைந் தார். மணலியில் நடந்த கொலையால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மணலி ஜலகண்ட மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குளோரி (27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சுந்தரத்தின் தந்தை இறந்து விட்டார். அவரது தாய் செல்வி (50), குளோரி யுடன் வசித்து வந்தார். 

வீட்டு வேலைகளை செய்வது தொடர்பாக செல்விக்கும், குளோரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவருமே தனித்தனியாக சுந்தரத்திடம் போன் செய்து முறையிட்டனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் வீட்டு வேலை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். மாமியாரால் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறதே என குளோரிக்கு ஆத்திரம் அதிகமானது. இதனால் தூக்கம் வரவில்லை.

நள்ளிரவு ஒரு மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த குளோரி, சமையல் அறைக்கு சென் றார். அங்கிருந்த அம்மி கல்லை தூக்கி வந்து செல்வியின் தலையில் போட் டார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த செல்வி, பரிதாபமாக இறந்தார்.இதை தொடர்ந்து நேற்று காலை மணலி காவல் நிலையத்துக்கு தனது இரு குழந்தைகளு டன் குளோரி சென்றார். அங்கிருந்த போலீசாரிடம், எனது மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் அம்மி கல்லை அவரது தலையில் போட்டு கொலை செய்து விட்டேன் என கூறினார். 

இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து குளோரியை கைது செய்தனர். மாமியாரின் தலையில் அம்மி கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top