10 October 2013

பிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மரணம்

பிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மரணம்





தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறந்தவர் டிஸ்கோ சாந்தி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடுவது மட்டுமின்றி, நடிகையாகவும் வலம் வந்தார். இவர் உச்சத்தில் இருந்தபோதே, தெலுங்கு நடிகர் ஹரியை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.




இந்நிலையில், டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் ஆர்.ராஜ்குமார் என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். ஸ்ரீஹரி தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் கண் குருடான போலீஸ்காரர் வேடத்தில் நடித்திருந்தார். ஸ்ரீஹரி-டிஸ்கோ சாந்தி தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மரணம் அடைந்த ஸ்ரீஹரியின் குடும்பத்தினருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top