17 September 2013

கிரிக்கெட் வீரர் பாலாஜி திருமணம்: மாடல் அழகியை மணந்தார்

கிரிக்கெட் வீரர் பாலாஜி திருமணம்: மாடல் அழகியை மணந்தார்




சென்னை, செப்.17:-

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜிக்கும், மாடல் அழகி பிரியா தலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பாலாஜி - பிரியா தலூர் திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடுவதால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.


இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன், வீரர்கள் முரளிவிஜய், பத்ரி நாத், அணிருதா ஸ்ரீகாந்த் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். 31 வயதான பாலாஜி ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.


முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். வேகப்பந்து வீரரான அவர் 8 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது தமிழக அணிக்காக முதல்தர போட்டியில் விளையாடி வருகிறார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top