16 September 2013

மிஸ் அமெரிக்கா 2014 பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்

மிஸ் அமெரிக்கா 2014 பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்



அமெரிக்காவின் அட்லாண்டா சிட்டியில் நடந்த மிஸ் அமெரிக்கா போட்டியில் 24 வயது இந்திய வம்சாவளி பெண் பட்டம் வென்றார். மிஸ் அமெரிக்கா வரலாற்றில் இந்திய பெண் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை.

அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) 'மிஸ் அமெரிக்கா' பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.

மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற தவுலுரி கூறுகையில், ''மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. யார் மிஸ் அமெரிக்காவாக வருவார் என டி.வி.யை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top