பூமியை நோக்கி பாய்ந்து வரும் சூரிய காந்தப்புயல்
செயற்கை கோள்கள் பாதிக்கும் அபாயம்
வாஷிங்டன், ஆக.23–
சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது அதில் இருந்து சூரிய கதிர்கள் பெருமளவில் காணப்படும். இதுவே சூரிய காந்தபுயலாக மாறுகின்றன.
இவை பூமியை நோக்கி வரும். இது பல ஆண்டுகளுக்கு ஓருமுறை நிகழும். அது போன்ற சூரிய காந்தப் புயல் கடந்த 20–ந்தேதி உருவாகி உள்ளது.
அது பூமியை நோக்கி வினாடிக்கு 570 மைல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. இதனால் விண்வெளியில் 100 கோடி டன்னுக்கும் அதிகமான துகள்கள் பரவியுள்ளன. இந்த புயல் பூமியை வந்தடைய 3 நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், விண்வெளியில் உலக நாடுகள் நிறுத்தியுள்ள செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கு முன்பும் சூரியபுயல் பூமியை தாக்கி உள்ளது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், கடந்த 1989–ம் ஆண்டு கனடாவை தாக்கியது. அதில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
0 comments