போலீசுக்கும் நீதிமன்றத்துக்கும் வெட்டி வேலை வைக்கும்
அஞ்சலி - பாரதிதேவி!
சென்னை: அஞ்சலியை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரை அழைத்துவர போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.
கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலி, தன் சித்தி பாரதி தேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் அவர் தலைமறைவாக இருந்தார்.
அப்போது அவரை யாரோ கடத்தி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக பாரதிதேவி போலீசில் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
போலீசுக்கும் நீதிமன்றத்துக்கும் வெட்டி வேலை வைக்கும் அஞ்சலி - பாரதிதேவி!
அஞ்சலியின் சகோதரரும் போலீசில் புகார் செய்தார். தமிழக, ஆந்திர போலீசார் அஞ்சலியை தேடி வந்த நிலையில், ஹைதராபாத் போலீசில் அஞ்சலி திடீரென ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து அவரை தேடுவதை போலீசார் கைவிட்டனர். பின்னர் தெலுங்கு படங்களில் அஞ்சலி நடிக்க துவங்கினார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஹேபியஸ் கார்பஸ் வழக்கு விசாரணையில் அஞ்சலி மர்ம நபர் பிடியில் இருப்பதாக பாரதி தேவியின் வக்கீல் வாதிட்டார். அவரை கோர்ட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
இதையடுத்து 9-ந் தேதி அஞ்சலியை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அஞ்சலியை தேடி பிடித்து அழைத்து வருவதற்காக போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர்.
சித்தியுடன் சமரசமாகி, ஹைதராபாதில் நிகழ்ச்சிகளுக்கு அவருடனே திரிகிறார் அஞ்சலி. அதேபோல ஹேபியஸ் கார்ப்பஸ் மனு கொடுத்துள்ள சித்தி பாரதிதேவியும் அஞ்சலியுடன்தான் இருக்கிறார். இருவருக்கும் சென்னை வரத் தெரியாதா... போலீசாருக்கும் நீதிமன்றத்துக்கும் வேறு வேலையே இல்லையா?













0 comments