பட்டத்து யானை திரை விமர்சனம்

காரைக்குடியில் சந்தானம் நடத்தும் கேட்டரிங்கில் விஷாலும் அவர் நண்பர்களும் வேலை செய்கிறார்கள். அங்கு ஒரு பிரச்னை வர, திருச்சிக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் விஷாலுக்கு ஐஸ்வர்யா மீது காதல்.
ஐஸ்வர்யா அப்பாவுக்கு உள்ளூர் தாதாக்களுடன் பிரச்னை. அதை விஷால் தட்டி கேட்க, தாதாக்கள் அவரை விரட்டுகிறார்கள். அதுவரை அப்பாவி சரவணனாக இருந்தவர், திடீர் அவதாரம் எடுத்து, ‘நான் சமையல்வேலை கத்துக்கிட்டதே மதுரை ஜெயில்லதாண்டா’ என்று பஞ்ச் அடிக்கிறார். அவர் ஏன் ஜெயிக்குப் போனார், திருச்சி தாதாக்களை ஜெயித்தாரா, ஐஸ்வர்யாவை கைபிடித்தாரா? என்பது மீதி கதை.
ஆக்ஷன் டின்னர் என்று முடிவு செய்து விட்ட பிறகு, அதற்கு எந்த மாதிரி கதை தேவையோ, அதை அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் மலைக்கோட்டை, கொஞ்சம் சண்டக்கோழி கலந்து பட்டத்து யானை மீது சவாரி செய்திருக்கிறார். காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட், ஆக்ஷன் என அத்தனை பார்முலாவையும் அள்ளிப்போட்டு பரிமாறியிருக்கிறார்.
விஷால் அனாதை குழந்தை மீது அன்பு, ஐஸ்வர்யா மீது காதல், நண்பர்களுடன் காமெடி, வில்லன்களுடன் அடிதடி என்று சகல ஏரியாவிலும் தன் பங்கை சரியாகச் செய்கிறார்.

அடுத்த ஹீரோ சந்தானம். வடிவேலு பாணியில் பாடிலாங்குவேஜ் காமெடி பண்ணியிருக்கிறார். திருச்சியில் விஷால் அண்ட் கோ தனியாகவிட்டு விட்டுச் செல்ல, சந்தானம் தவிக்கிற தவிப்பு நான் ஸ்டாப் காமெடி.
அறிமுகம் ஐஸ்வர்யாவுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை. முதல் படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு பக்குவமான நடிப்பு. சில காட்சிகளே வந்தாலும் மயில்சாமி வரும் காட்சியெல்லாம் சிரிப்பு அலை. குறிப்பாக போலீஸ் அதிகாரியிடம் கேசுவலாக அவர் அடிக்கும் கமெண்டுகள் காமெடி சரவெடி.
தமனின் இசையில் பாடல்களில் பழைய பாப்புலர் மெட்டுகளின் சாயல் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறது.

வைத்தியின் ஒளிப்பதிவு ஆக்ஷன் படத்துக்கு அளவெடுத்து தைத்த சட்டை.
விஷால் யார்? அவருக்கு குடும்பம் எதுவும் கிடையாதா? தாதாக்கள் மிரட்டும்போது ஐஸ்வர்யாவின் அப்பா போலீசுக்கு போகாதது ஏன்? தாதாக்கள் மிரட்டல் இருந்தால் ஒரு மாணவிக்கு போலீஸ் பாதுகாப்புதானே கொடுப்பார்கள், தினம் ஒரு பள்ளியில் பரீட்டை எழுத எப்படி அனுமதிப்பார்கள்? இப்படி ரீலுக்கு ரீல் லாஜிக் பொசுங்குகிறது. இந்த யானையிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை.

0 comments