நஸ்ரியா நஸீம்டம்
"என்னைப் பற்றி எதுவும் வெளியே சொல்லக் கூடாது "
"என்னைப் பற்றி எதுவும் வெளியே சொல்லக் கூடாது "
என்று மிரட்டிய நடிகர் ஆர்யா
சென்னை:
தன்னைப் பற்றி யாராவது கேட்டால் எதுவும் சொல்லக் கூடாது என்று ஆர்யா தன்னை மிரட்டியதாக நஸ்ரியா நஸீம் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான நேரம் படத்தில் நடித்திருக்கும் நஸ்ரியா நஸீம் நடிக்கத் தெரிந்தவர் என்று முதல் படத்திலேயே பெயர் எடுத்துவிட்டார்.
அவர் தற்போது ராஜா ராணி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நயன்தாரா இருந்தாலும் ஆர்யாவுக்கு நஸ்ரியா தான் ஜோடி என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக நையாண்டி படத்தில் தனுஷுடன் நடிக்கிறார். ஜெய்யுடன் நிக்காஹ் எனும் திருமணம் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் நஸ்ரியாவிடம் நீங்கள் நடிக்கும் ஹீரோக்கள் பற்றி கூறுங்கேளன் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், நீ என்னுடன் நடிப்பது தெரிந்து என்னைப் பற்றி உன்னிடம் ஏதாவது கேட்பார்கள். யாரிடமும் நீ எதுவும் சொல்லக் கூடாது என்று ஆர்யா என்னை கிட்டத்தட்ட மிரட்டினார் என்றார்.
0 comments