சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்
விபத்துக்களின் தலைநகரம் சிங்காரச் சென்னை!
சென்னை:
காலையில பேப்பரைத் திறந்தாலே, வெறும் விபத்துச் செய்திகள் தான் என புலம்புபவரா நீங்கள். இதோ, தற்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடந்த இடமாக தமிழகம் மாறியுள்ளது தெரிய வந்துள்ளது. சாலை விபத்துக்களைத் தடுக்க சரியான படி சாலைவிதிகளைக் கடைபிடியுங்கள் என சிறு வயது முதலே நமக்குக் கற்பிக்கப்பட்டு வந்தாலும், இந்த எந்திர உலகத்தில் நாம் ம்ந்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது தான் உண்மை.
சமீபத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த கருத்தில், ‘ நாம் சரியாக நிதானமாக செல்ல வேண்டும் என எண்ணினாலும், சாலையில் நமக்கு பின்னால் வருபவர்களின் வேகத்தாலும், அவசரத்தாலும் நாமும் சேர்ந்து அவர்களோடு ஓட வேண்டியிருக்கிறது' எனக் கூறியிருந்தார்.
அதுபோல், இன்றைய சூழலில் மற்றவர்களின் கட்டாயத்தால் நாமும் வேகமாகச் செல்ல வேண்டிய சூழ்நிலைக் கைதிகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுகூட, விபத்துக்கள் அதிகரித்ததற்கான காரணமாக இருக்கலாம்.
தமிழகம் முதலிடம்:
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்ற மாநிலம் தமிழகம் தானாம்.தமிழகத்தில், 2003ம் ஆண்டு இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக 51,000 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அடுத்தபடியாக, 2012ல் அதிகபட்சமாக 68,000 விபத்துக்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.
இங்கு, ஒரு மணிநேரத்திற்குள் 8 விபத்துக்கள் நடைபெற்று விடுவதாக புள்ளிவிபர அறிக்கை தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 44 பேர் பலி: கடந்த ஆண்டில், சாலை விபத்தில் மட்டும் 16,175 பேர் பலியாகியுள்ளனராம். இது நாளொன்றுக்கு சராசரியாக, 44 பேர்.
சிங்காரச் சென்னை முதலிடம்:
அதிலும் குறிப்பாக, சென்னையில் தான் விபத்துக்கள் அதிகமாம். அதிக சாலை விபத்துக்களைச் சந்திக்கும் பெரு நகரங்கள் வரிசையில்,
சென்னை (9663) முதலிடத்திலும்,
டில்லி (5865) 2வது இடத்திலும்,
பெங்களூரு (5508) 3வது
இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது

















0 comments