29 June 2013

ஒரு நடிகையின் கதை - ரஜினி மற்றும் கமல் பட ஹீரோயின் இன்றைய பரிதாப நிலை

 ஒரு நடிகையின் கதை 

ரஜினி மற்றும் கமல் பட ஹீரோயின் இன்றைய பரிதாப நிலை 


  
  கமலோடு டிக்…டிக்….டிக்,  

ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர்,  

பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள்  

இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா.


இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர்தான்.

அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர்.

தன்னை சந்தித்த பத்திரிகையாளரிடம், "சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!” என்று கதறினார்.

சினிமா ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான்.

அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன்.

அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை.

அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன்.  

‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.

அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது.

 நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது.

நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது.

நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப்போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார்.

அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன்.

ஆடி அடங்கி விட்ட நிஷா பலரால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம், காலம் ஒரு மோசமான வாத்தியார், அது அடித்து சொல்லி கொடுக்கும், முட்டி போட வைத்து கதறடிக்கும். குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். அதற்க்கு நடிகைகள் கூட விலக்கில்லை. பார்த்தோ, படித்தோ திருந்தி கொள்வது நல்லது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top