ஜூலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்
5 ஒருநாள் போட்டியில்
இந்தியா விளையாடுகிறது
மும்பை : அடுத்த மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்தது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மினி உலக கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி, அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சென்று முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது.
முதல் 3 போட்டிகள் ஹராரே மைதானத்திலும், அடுத்த 2 ஆட்டங்கள் புலவாயோவிலும் நடக்க உள்ளன. வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடி வருவதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை உறுதி செய்யாமல் இருந்தது. தற்போது அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தாலும், டோனி தலைமையில் முழு பலமுள்ள அணி களமிறங்குமா என்பது தெரியவில்லை.
போட்டி அட்டவணை
ஜூலை 24 முதல் ஒருநாள் ஹராரே
ஜூலை 26 2வது ஒருநாள் ஹராரே
ஜூலை 28 3வது ஒருநாள் ஹராரே
ஜூலை 31 4வது ஒருநாள் புலவாயோ
ஆகஸ்ட் 3 5வது ஒருநாள் புலவாயோ
கடந்த 2010ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு தொடரில் சுரேஷ் ரெய்னா தலைமையில் விளையாடிய இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி பைனலுக்கு முன்னேறத் தவறியது குறிப்பிடத்தக்கது.
0 comments