‘ பார்லி.,தேர்தல்: 40 தொகுதிகளிலும் தனித்து தனித்து போட்டி ’
- ஜெ., அதிரடி அறிவிப்பு
புதுடில்லி:
வரவிருக்கும் பார்லி.,தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என கட்சியின் பொதுசெயலரும், தமிழக முதல்வருமான ஜெ., டில்லியில் அளித்த பேட்டியின்போது கூறினார். தமிழகத்திற்கு வளர்ச்சிக்கான நிதியை கடந்த முறை மத்திய அரசு தரவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் பதிலும்;
கேள்வி : பா.ஜ., கட்சியில் அத்வானி விலகல் குறித்து ?
பதில்: இது உள்கட்சி விவகாரம், நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: மோடி தேர்வு குறித்து ?
பதில்: அரசியல் ரீதியாக பதில் சொல்வதில் சரியாக இருக்காது. அதே நேரத்தில் அவர் தனிப்பட்ட முறையில் எனது நண்பர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் வளர்ச்சிக்கு அழைத்து சென்றவர்.
கேள்வி: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பி.சி.சி.ஐ குறித்து தங்களின் கருத்து ?
பதில் : இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: பார்லி., தேர்தல் கூட்டணி எதுவும் உண்டா?
பதில் : அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெறுவதே நோக்கம்.
இவ்வாறு ஜெ., கூறினார்.
0 comments