30 June 2013

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரம்

 
சென்னை :
                         அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.

நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.


டி.என்.பி.எஸ்.சி.,: 
                               குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம் கிடைக்கும்.

இதேபோல், சுகாதாரத்துறையில், 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய, செப்டம்பர், 22ம் தேதி, போட்டித்தேர்வை நடத்துகிறது. இதனை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல், பல்வேறு குறைந்தபணியிடங்களுக்கான தேர்வுகளும், தொடர்ந்து நடக்க உள்ளன.

டி.ஆர்.பி., :
                   அரசு பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், 15 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வை, 7 லட்சம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்க, நாளை ஜூலை 1ம் தேதி கடைசி நாள். 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,900 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வை, ஜூலை, 21ம் தேதி நடத்துகிறது.இந்த தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். 

மேலும், 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,100உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளிலும், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.மேலும், அரசு பள்ளிகளில், தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர்களும், நியமிக்கப்பட உள்ளனர். வரும் செப்டம்பருக்குள், இந்த அனைத்து பணி நியமனங்களும் முடிக்கப்பட்டுவிடும் என்பதால்,

வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பட்டதாரிகள், உற்சாகம் அடைந்து உள்ளனர்.அதே நேரத்தில், பணி நியமனங்களே நடக்காமல் உள்ள, இதர துறைகளில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்பவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top