பாம்பன் பாலத்தில் புதிய கான்கிரீட் தூண் பணிகள் தீவிரம்
கப்பல் மோதியதால் சேதமடைந்த பாம்பன் பாலத்தில், நிரந்தர கான்கிரீட் தூண் அமைக்கும் பணிகளுக்காக, ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் புதிய கான்கிரீட் தூண் அமைக்கும் பணிகளை மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் எண்ணெய்க் கப்பல் ஒன்று மோதி பாம்பன் பாலத்தின் 121வது தூண் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் பாலத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் 220 இரும்பு பட்டைகள் வைத்து தற்காலிக இரும்புத்தூண் ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக ரயில் போக்குவரத்து நடைபெற்றது.
இந்நிலையில் தற்காலிக தூண் அகற்றப்பட்டு, நிரந்தர கான்கிரீட் தூண் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்து தற்போது, தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
0 comments