ஜூன் முதல் மின்வெட்டு குறைப்பு; மின் கட்டணம் உயராது : அமைச்சர்
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது, தேமுதிக உறுப்பினர் சேகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 12-ம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோல் சென்னையில் தற்போது மின்வெட்டு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை: தமிழகத்தில் மின் கட்டணம் தற்போதைக்கு உயராது என்றும் அவர் குறிப்பிட்டார்.மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், மின் கட்டணத்தை உயர்த்த மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், அதை தமிழக அரசு தாங்கிக் கொள்ளும் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
0 comments