14 May 2013

ஆட்டோ சங்கர் - வரலாறு 1

ஆட்டோ சங்கர் - வரலாறு


தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 ஆண்டு காலம் நீடித்தது.

ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், `திகில்' சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரை கொடூரமான முறையில் படு கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.

ஆட்டோ சங்கர் யார்?

சென்னை திருவான்மிïரில் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்பட்டான்.

சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மிïர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஓட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன் மிகவும் தீவிரமாக ஈடுபட்டான்.

திருவான்மிïரில் உள்ள ஒரு ஓட்டலில் (லாட்ஜ்) சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தை கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு வந்து விபசாரம் நடத்தினான்.

சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான்.

பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் "ஏர்கண்டிஷன்" வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளை செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.இந்த நவீன பங்களாவுக்கு கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர் விபசார விருந்து படைப்பான்.

ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசார தொழிலில் இறங்கிய தால் அவனுக்கு பல காதலிகள் இருந்தார்கள். அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.

இப்படி பெங்களூரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளை தனது 4_வது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்பவனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனை சிக்கலில் மாட்டி விட்டன.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29_5_1988_ல் போலீசில் புகார் செய்தார்கள்.

இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது.

காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது" என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான். 

மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.

சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 பேர் பிணங்களையும் திருவான்மிïர் பெரியார் நகர் ரங்க நாதபுரத்தில் தெனாலி கால் வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலையின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர்.ஒரு வீட்டின் 3_வது அறையில் போலீசார் தோண்டினார்கள். 5 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன. 2_வது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீசார் வெளியே எடுத்தனர்.

அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டில் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் தோண்டி எடுத்தனர்.4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப்போகாமல் அப்படியே ருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும் அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 7 கூட்டாளிகளும் 7_7_1988 அன்று கைது செய்யப்பட்டனர்
.
சங்கரின் மனைவி ஜெகதீசுவரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.

பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டைரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.

சங்கர் அவனுடைய காதலி விஜி, மது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் "பச்சை" குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான்.மார்பில் 3_வது மனைவி சுமதியின் பெயரை பொறித்திருந்தான்.
சங்கரின் 4_வது மனைவியான பெங்களூர் லலிதாவை காணவில்லை. போலீசுக்கு பயந்து அவள் ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது.இந்த லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக மோகன் (ஆட்டோ சங்கர் தம்பி) போலீசாரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து திருவான்மிïர் பெரியார் நகரில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்று தோண்டினார்கள்.

சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்டு தரை இருந்தது. அதை தோண்டியபோது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு சிமெண்டு பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீசார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டியபோது உள்ளே எலும்புக் கூடு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.எலும்புக்கூட்டின் மீது எந்தவித துணியும் இல்லை. நிர்வாணமாக இருந்தது. எலும்புக்கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர்.

லலிதாவை கொலை செய்து நிர்வாணமாக புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது. அது பெண்ணின் உடல்தான் என்று டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இதனால் ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:_

1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).

2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.

3. திருவான்மிïர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).

4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).

5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)

6. கோவிந்தராஜ் (வயது 28).

கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார்.

இந்த வழக்கு முக்கியமாக கருதப்பட்டதால் மாநில ரகசிய குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி, விசாரணையை மேற்கொண்டார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top